angadi.com post

கவர்ச்சிகரமாக விளம்பரத்தை எவ்வாறு angadi.comஇல் பதிவிடுவது தெரியுமா? ஒரு விளம்பரத்தை விளம்பரப்படுத்துவதோடு, உங்கள் பொருட்கள் அல்லது சேவையை விரைவாக விற்க வழிவகுக்கும் ஒரு விளம்பரத்தை பதிவிடுவது நீங்கள் நினைப்பது போல எளிதானது அல்ல. உங்கள் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தைத் தரும் விளம்பரத்தை எவ்வாறு உருவாக்குவது எப்படி என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால், ஒரு கவர்ச்சிகரமான விளம்பரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், அது நிச்சயமாக உங்கள் பொருட்களை வாங்குவதற்கு உந்துதலாக இருக்கும் வரும். அதைச் செய்ய, ஒரு விளம்பரத்தை மற்றவர்கள் விரும்பத்தக்கதாக மாற்றுவதற்குரிய முறைகள் கீழே உள்ளன!

கவர்ச்சிகரமான விளம்பர தலைப்பை தேர்ந்தெடுக்கவும்:

எந்தவொரு விளம்பரத்தின் தலைப்பு மிக முக்கியமான பகுதியாக இருப்பதால், நீங்கள் ஒரு தலைப்பை தேர்ந்தெடுப்தற்கு முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவது புத்திசாலித்தனமாக இருக்கும். ஒரு விளம்பரத்தின் தலைப்பு பொதுவாக உங்கள் பொருட்கள்/சேவைகளை விரைவாக விற்க வழிவகுக்கும்:

  • இது வலைத்தள தேடலுக்குரிய முக்கிய சொற்கள் மற்றும் பொருட்கள்/சேவைகளை அடையாளங்காட்டக்கூடியதாக இருக்கவேண்டும்
  • உங்கள் பொருட்கள்/சேவை முக்கிய நன்மையை களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்
  • இது பார்வையாளர்களை உங்கள் விளம்பரத்தின்பால் ஈர்க்கக்கூடியதாக இருக்கவேண்டும்.
  • இது குறுகிய மற்றும் 6 வார்த்தைகளுக்கு குறைவாக இருக்கவேண்டும்.
  • பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டது

இடத்தைத் தேர்ந்தெடுப்பது- அது எவ்வாறு உதவுகிறது?

இரண்டாவது உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுப்பது (பொருட்கள் அல்லது சேவை கிடைக்கும் இடம் ) மற்றும் உங்கள் நகரத்தை நீங்கள் தேர்வு செய்யும்போது மேலும் இலகுவாக பயனரை சென்று அடைகிறது

பொருட்கள்/சேவைகளை பற்றிய விரிவான விளக்கத்தை தெரியப்படுத்தவும்:

உங்கள் பொருட்கள்/சேவைகளை வாங்குபவர்களை கவர்வதற்கு நீங்கள் உங்கள் விளம்பரத்துக்கு விரிவான மற்றும் கவர்ச்சிகரமான ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும். எனவே நீங்கள் இதற்கு இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும்; உங்கள் பொருட்கள்/சேவையின் முதன்மை அம்சங்களைப் பற்றி விவரியுங்கள், மேலும் அதை விளக்கமாகவும் எழுச்சியூட்டும் விதமாகவும் விவரிக்கவும். விரிவான அனைத்து அம்சங்களையும் வாங்குபவர்களின் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிபபதாக இருக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்ட விபரங்கள் பொதுவாக வாங்குபவர்களால் கவனிக்கப்படுகிறது:

  • அளவீடுகள்(Measurements)
  • எடை (Weight)
  • பொருள் (அதாவது, பொருட்கள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது மற்றும் அதன் பாகங்கள்) – Material (i.e., what the item is made of which might be several materials)
  • அது எங்கே செய்யப்பட்டது (Where it was made)
  • பொருட்களின் வயது (Age of the item)

உங்கள் பொருட்கள்/சேவைகளை மிகைப்படுத்தி விற்க முயற்சிக்காதீர்கள்:

உங்கள் விளம்பரபொருட்கள்/சேவைகள் பெரியது என்பதைக் காட்ட நேர்மறையான சொல் பதத்தை பாவிப்பதோ, உங்கள் சொத்தை மிகைப்படுத்தி காட்ட முயல்வதோ உங்கள் விளம்பரத்துக்கு எதிர்மறையான விளைவைக் கொடுக்கும் , மேலும் அதன் “முக்கியத்துவத்தை” குறைக்கும். உண்மை என்னவென்றால், மிகவும் யதார்த்தமான மற்றும் நேர்த்தியான விளம்பரத்திற்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள், ஏனெனில் அலங்கரிக்கப்பட்ட நம்பகத்தன்மை குறைவான விளம்பரத்தை எவரும் விரும்ப மாட்டார்கள். எனவே, உங்கள் விளம்பரத்தை விவரிக்கும் நிலையைப் பொறுத்தே, அதை நீங்கள் வழங்குவதில் உண்மையாக இருக்கும்போதே வாங்குபவர்களுக்கு அதன் சிறப்பை புரிந்து கொள்ள உதவும். எனவே உங்கள் விளம்பரத்தை உண்மையாக காண்பிக்கவும்.

பொருத்தமான வகையைத் தேர்ந்தெடுக்கவும்:

உங்களுடைய விளம்பர பொருட்கள்/சேவைகளை ஒத்த விளம்பரங்களை பாருங்கள். உங்கள் பொருட்கள் / சேவைக்கு எது சிறந்ததோ அந்த வகையைத் தேர்ந்தெடுக்கவும். அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் இருப்பதால், சரியான தேர்ந்தெடுக்கப்பட்ட வகைப்பாடுகள் விரைவாக பயனரை அடைய உதவுகின்றன.

சிறந்த புகைப்படங்களை தெரிவுசெய்து கொள்ளுங்கள்:

புகைப்படங்கள் வழக்கமாக ஆன்லைன் விளம்பரங்களின் மிகவும் முக்கியமானதொன்றாகும் இவை வலைத்தள பாவனையாளர் உங்கள் விளம்பரத்தின் பக்கமாக வருவதற்கும்அவற்றை கிளிக் செய்வதற்கும் தூண்டுதலாக அமையும் எனவே எப்போதும் வலைத்தள பாவனையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் தனித்துவமான அம்சங்களை முன்னிலைப்படுத்தும் பிரகாசமான, மிருதுவான மற்றும் தொழில்முறை தோற்றமுடைய புகைப்படங்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் விளம்பரத்தை இன்னும் துல்லியமாகக் காட்ட அதிகளவான அனுமதிக்கப்பட்ட அளவுக்கு புகைப்படங்களை பதிவேற்றுங்கள்.

உங்கள் விளம்பரத்தை பதிவேற்றி முடித்துவிட்டீர்களா? angadi.com நிர்வாக குழு உங்கள் விளம்பரத்தினை பரிசீலித்து அனுமதியளித்ததும் அதிக நேரமாகாது உங்கள் பொருட்கள்/சேவைகளை விற்பதற்கு!

So what are you waiting for? Get posting now!

About Author

Leave a Reply

Leave a Reply